மூதூர் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்-

மூதூர் வலயத்தின் பின்தங்கிய பிரதேச பாடசாலைகளின் கோரிக்கைக்கு அமைவாக, கத்தார் சாரிட்டி (Qatar Charity) நிறுவனத்தினால் முதற்கட்டமாக 6 பாடசாலைகளுக்கு 80 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வு தோப்பூர்  அல்-ஷிபா வித்தியாலயத்தில்  நடைபெற்றது.

​இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கத்தார் சாரிட்டி (Qatar Charity) நிறுவனத்தின் உத்தியோகத்தர்களான எ.எல்.எம். முசாக்கீர் மற்றும் என்.எம்.ஏ.அலீம் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்குத் துவிச்சக்கர வண்டிகளை கையளித்தனர்.

​இறுதியாக, மாணவர்களின் கல்வி நலன் கருதி இத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய கத்தார் சாரிட்டி(Qatar charity) நிறுவனத்திற்கும், அதன் திட்ட ஒருங்கிணைப்பாளர் (Program Coordinator) கவ்லீன் பவுட்டிற்கு (Hafleen Fuad) பாடசாலை சமூகம் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டது.