நீண்டகாலமாக போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த மருந்தக உரிமையாளர் கைது

நீண்டகாலமாக போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் கைதாகியுள்ளார்.

ஹட்டன் நகரைச் சேர்ந்த ஒரு மருந்தக உரிமையாளர், ஹட்டன் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மருந்தக உரிமையாளர் இளைஞர்களைக் குறிவைத்து, மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இந்த மருந்துகளை மிக அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ஹட்டன் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகரவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹட்டன் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், ஒரு பொலிஸ் அதிகாரியை பயன்படுத்தி சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது விற்பனைக்கு வைத்திருக்கும் போதை மாத்திரைகள் வர்த்தக நிலையத்தில் வைத்திருக்கும் இடத்தினை கண்டறிந்து கொண்டு வர்த்தக நிலைய உரிமையாளரிடம் மேற்கொண்டுட விசாரணையின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவரிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 1400 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபரை ஹட்டன் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.