வீதியில் நின்று அச்சுறுத்தல் விடுத்தவர் விளக்கமறியலில்!

மில்லவன–மல்சிறிபுர வீதியில் நின்று, வாகனங்கள் மற்றும் பாதசாரிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட சந்தேக நபர், எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரா பகுதியைச் சேர்ந்த 40 வயதான குறித்த சந்தேக நபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மல்சிறிபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர், அரிவாளுடன் வீதியில் நின்று மறித்ததாகவும், மதுபோதையில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டு வாகன சாரதிகளுக்கும் பொதுமக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மார்ச் 31 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.