குளியாபிட்டி சம்பவம் : சந்தேகநபர் ஏற்கனவே குற்றப்பின்னணி உடையவர்?

குளியாபிட்டி பகுதியில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை தலைக்கவசத்தால் தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஏற்கனவே குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் குளியாபிட்டிய பகுதியை சேர்ந்தவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவருக்கு போதைப்பொருள் சோதனை நடத்தப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகள், அவரது குற்றப் பின்னணியை உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குளியாபிட்டிய மீகஹகொட்டுவ சந்தியில், பெண்ணொருவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த சந்தேகநபர், மற்றுமொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை தலைக்கவசத்தால் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டதையடுத்து, சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.