சட்டவிரோதமாக எரிபொருள் சேமித்து வைத்திருந்த இருவர் கைது!

தேவைக்கு மேலதிகமாக சட்டவிரோதமாக டீசலை சேமித்து வைத்திருந்த குற்றச்சாட்டில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து மொத்தமாக 465 லீட்டருக்கும் அதிகமான டீசலை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சந்தேக நபர்கள் இருவரும், நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பொலிஸ் நிலைய அதிகாரிகள், நேற்று இரவு ஹின்னதியான பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, மினுவாங்கொடவைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்தனர்.

குறித்த நபர், அவசியமற்ற முறையில் 410 லீட்டர் டீசலை சேமித்து வைத்திருந்தமை கண்டறியப்பட்டது

இதேவேளை, சிலாபம் பொலிஸ் பிரிவின் முதலியவெல பகுதியில், அனுமதியின்றி 55 லீட்டர் டீசலை சேமித்து வைத்திருந்த, இலப்படதெனியவைச் சேர்ந்த 73 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், அந்தந்த பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.