சுவிட்சர்லாந்தில் அதிகளவிலான விமானங்கள் பறந்துள்ளன
சுவிட்சர்லாந்தில கடந்த 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், விமான பறப்பு எண்ணிக்கை 4 சதவீதம் அல்லது 22 இலட்சம்; அதிகரித்துள்ளதாக, மத்திய புள்ளியியல் அலுவலகம் இன்று வியாழக்கிழமை அறிவித்தது. இது கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட சரிவுக்கு முந்தைய புள்ளிவிவரங்களையும் விஞ்சியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புள்ளிவிவரங்களின்படி, 325 இலட்சம் பயணிகளுடன் சூரிச் விமான நிலையம் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக இருந்ததுள்ளது, அதைத் தொடர்ந்து ஜெனீவா 17.7 கோடி பயணிகளுடனும், பேசல்-முல்ஹவுஸ் 9.6 கோடி பயணிகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் இருந்துள்ளன.
விமானப் பயணங்களின் எண்ணிக்கையும் 3 சதவீதம் அதிகரித்து 450,773 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்த எண்ணிக்கை கொரோனாவுக்கு முந்தைய 2019 ஆம் ஆண்டை விட இன்னும் 4 சதவீதம் குறைவாகவே உள்ளது.
மேலும் புள்ளிவிவரங்கள் சரக்கு விமான போக்குவரத்தில் ஒரு சிறிய சரிவைக் காட்டுகின்றன. 2025 ஆம் ஆண்டில் கொண்டு செல்லப்பட்ட டன்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.4சதவீதம் குறைந்துள்ளது.
