
மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை தலைக்கவசத்தால் தாக்கியவர் கைது
குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீகஹகொட்டுவ சந்தி அருகில் வீதியின் நடுவில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை, பாதுகாப்பு தலைக்கவசத்தால் கொடூரமாக தாக்கிய சந்தேகநபரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒரு பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த நபர் ஒருவர், மோட்டார் சைக்கிளை நிறுத்தி இறங்கி, மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை பாதுகாப்பு தலைக்கவசத்தால் கொடூரமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், குளியாப்பிட்டிய பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
