இஸ்ரேல் மீது ஈரான் நேற்று நடத்திய ஏவுகணைத் தாக்குதல்

ஈரான், நேற்று புதன்கிழமை இரவு, நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், டெல் அவிவ் அருகே இரண்டு பேர் உயிரிழந்ததாக இஸ்ரேலிய மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விழுந்த ஏவுகணைகளின் சிதறல்கள் பல இடங்களில் தாக்கியுள்ளதாக பாதுகாப்புச் சேவைகள் தெரிவித்துள்ளன.

டெல் அவிவ் அருகே உள்ள ராமத் கான் (Ramat Gan) நகரில் ஒரு கட்டிடம் பலத்த சேதமடைந்ததில், அங்கு இருந்த இருவர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலையும் சேர்த்து, இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆகஉயர்ந்துள்ளது.

ஏவுகணைத் தாக்குதலால் பல இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன, வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன மற்றும் இடிபாடுகள் குவிந்துள்ளன.

இஸ்ரேலிய பொலிஸார் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும், மீட்புக் குழுவினரும் டெல் அவிவ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழுந்த ஏவுகணை சிதறல்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.