பிரான்ஸ் ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிக்கை!

சிவில் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் தடை செய்யப்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

ஈரான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கட்டார் அமீர் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மேலும் தெரிவித்துள்ளார்.