
தமிழகம் முழுதும் விஜய் பாடல்களுக்கு தடை!
இந்தியாவின் தமிழகம் முழுதும் உள்ள பாடசாலைகளில் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் பாடலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த காலங்களில் பாடசாலை ஆண்டு விழாக்களில், நடன நிகழ்ச்சிகளுக்கு, நடிகர் விஜய்யின் பாடல்களே பிரதான தேர்வாக இருந்தன.
தற்போது, அவர் கட்சி ஆரம்பித்துள்ளதால் தமிழகம் முழுதும் நடக்கும் பாடசாலை ஆண்டு விழாக்களில், நடிகர் விஜய்யின் திரைப்பட பாடல்கள் வேண்டாம் என, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்துவதாக கூறப்படுகிறது.
சில பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகளில், விஜய்யின் பாடல்கள் இசைக்கப்படும்போது, அவரது கட்சி கொடிகளை காண்பித்தும், கட்சியின் பெயரை ஆரவாரமாக உச்சரித்தும், மாணவ, மாணவிகள் காணொளிகளை வெளியிடுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
