
எரிபொருள் கையிருப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
சாதாரண நுகர்வின் கீழ், நாட்டில் எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை விசேட உரையொன்றை ஆற்றி இதனைக் குறிப்பிட்டார்.
92 ரக பெற்றோல் – ஏப்ரல் 23 ஆம் திகதி வரை
95 ரக பெற்றோல் – மே 10 ஆம் திகதி வரை
டீசல் – ஏப்ரல் 12 ஆம் திகதி வரை
சுப்பர் டீசல் – மே 10 ஆம் திகதி வரை என அமைச்சர் தெரிவித்தார்.
