IRIS Dena கப்பல் மீதான தாக்குதலுக்கு பழிதீர்க்க தயாராகும் ஈரான்!

இலங்கைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் IRIS Dena கப்பல் மீது தாக்குதல் நடத்தி, அதிலிருந்த கடற்படையினரைக் கொலை செய்தமைக்காக, எதிரித் தரப்பினர் மீது பாரிய பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் கடற்படைத் தளபதி ஷஹ்ராம் இரானி எச்சரித்துள்ளார்.

“எதிரியின் இந்தக் குற்றத்தை நாங்கள் மறக்க மாட்டோம், எமது தியாகிகளின் இரத்தத்திற்காக நிச்சயமாகப் பழிவாங்குவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிரிகள் எதிர்பார்க்காத இடத்திலிருந்து நடத்தப்படும் மிகக் கடுமையான தாக்குதல்கள் மூலம் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.