அமெரிக்கா ஈரானுடன் போரிடுவதற்கு ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ காரணமாக இருக்கலாம் – மேனிடோபா மாகாண முதல்வர்

அமெரிக்கா ஈரானுடன் போரிடுவதற்கு ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ (Epstein Files) ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று மேனிடோபா மாகாண முதல்வர் வப் கின்யூ தெரிவித்துள்ளார்.

எவ்வித காரணமுமின்றி ஈரானுடன் போர் நடத்தப்படுவதாகவும், இதனால் எரிபொருள் விலை உயர்ந்து சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“டொனால்ட் டிரம்ப் நமது பொருளாதாரத்தின் முதல் எதிரி” என்று சாடிய அவர், தேவையற்ற போர்களை நிறுத்திவிட்டு மக்களின் வாழ்வாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் போர் நடவடிக்கைகளால் குழந்தைகள் அநியாயமாகக் கொல்லப்படுவதையும் அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.