இலங்கையை வந்தடைந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் நோக்கில், இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்
தற்போது வந்துள்ள கப்பலில் 18,000 மெட்ரிக் தொன் டீசல், 17,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 3,000 மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் அடங்கியுள்ளன.
மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர், இன்று முதல் எரிபொருளைத் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்ப்படுகின்றது.
