
தலவாக்கலையில் பாடசாலை பேருந்து விபத்து : இரண்டு மாணவர்கள் காயம்!
-மஸ்கெலியா நிருபர்-
தலவாக்கலை ஹட்டன் பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பாடசாலை பேருந்து விபத்தில் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 7:45 மணியளவில், தலவாக்கலை புனித பட்ரிக் கல்லூரி (St. Patrick’s College) மாணவர்களை ஏற்றிக்கொண்டு வழமை போல் பயணித்த பாடசாலை பேருந்து இவ்வாறு விபத்துக்குள்ளானது.
தலவாக்கலை இருந்து ஹட்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அதே திசையில் முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு பேருந்துடன், மாணவர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக பேருந்து எதிர்பாராத விதமாக மிக பலமாக மோதியுள்ளது.
இந்த மோதலில் பேருந்தின் முன் பகுதி பலத்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
விபத்து நடந்தவுடன் அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
சாரதியின் அதிவேகமே இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த தலவாக்கலை பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து, போக்குவரத்தைச் சீர்செய்ததுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
