QR நடை முறை காரணமாக முச்சக்கர வண்டி சாரதிகள் அவதி!
-மஸ்கெலியா நிருபர்-
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் அவர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் பற்றாகுறை காரணமாக சிரமத்திற்குள்ளாகியுள்ளாக தெரிவிக்கின்றனர்.
இது குறித்து முச்சக்கர வண்டி சாரதிகள் கூறுகையில்,
QR நடை முறை காரணமாக வாராந்தம் வழங்கபடும் 15 லீட்டர் எமக்கு போதுமானது அல்ல, வாராந்தம் எமக்கு குறைந்த பட்சம் 30 லீட்டர் எரிபொருள் வேண்டும், என கோரிக்கை விடுக்கின்றனர்.
தனியார் பேருந்துகள், ஹட்டன் அரச பேருந்து நிலையத்தில் அவற்றிற்கான எரிபொருள் நிரப்பிக் கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது.
தனியார் வாடகை வேன்களுக்கு 40 லீட்டர் எரிபொருள் போதுமான அளவு இல்லை, என்று தனியார் வேன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர், வாராந்தம் 80 லீட்டர் எரிபொருள் தேவை என்று கூறுகின்றனர்.
நாங்கள் அன்றாட வாழ்வில் வாகனங்கள் வாடகைக்கு சென்று அதன் மூலம் கிடைக்கும் வருவாய் வைத்து, உணவு, வீட்டு வாடகை மற்றும் பாடசாலை, மருத்துவ, வாகன செலவு போன்றவற்றை நடாத்த வேண்டும். வழங்கபடும் 40 லீட்டர் எரிபொருள் எமக்கு போதுமானது இல்லை, என்று கூறுகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
