தேசிய மட்டத்தில் முதலிடத்தை தனதாக்கியது ஓல்டன் தமிழ் வித்தியாலயம்

-மஸ்கெலியா நிருபர்-

2026 ஆம் ஆண்டிற்கான உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு நாடளாவிய ரீதியில் நடத்திய “பல்வேறு மொழிகளில் கட்டியெழுப்பப்படும் பொதுவான மனிதாபிமானம்” எனும் தலைப்பிலான ஆக்கப்பூர்வமான காணொளி தயாரித்தல் போட்டியில், ஹட்டன் கல்வி வலயம் கோட்டம் மூன்றிற்கு உட்பட்ட சாமிமலை, ஓல்டன் தமிழ் வித்தியாலயம் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது..

​பாடசாலை அதிபர் திரு வே.முரளிதரன் வழிகாட்டுதலோடு, பாடசாலையின் தமிழ் மொழி பாட ஆசிரியர் திருமதி யோகதர்ஷினி நெறியாள்கையோடும், பாடசாலை ஆசிரியர் திரு அ.சொருபனினுடைய வடிவமைப்போடும், மாணவர்களான S.சிவானி C.ஹன்ஷிகா R.மேனகா T.சரோமியா S.சுவேதா ஆகியோருடைய அதியுச்ச திறமையினுடைய வெளிப்பாடக இவ் வெற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.