யாழ்.சுன்னாகம் பகுதியில் வாள் மற்றும் ஐஸுடன் மூவர் கைது!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் முனியப்பர் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வைத்து மூவர் சட்டவிரோத பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஒருவரிடமிருந்து வாளும், மற்றைய இருவரிடமிருந்து 2 கிராம் 340 மில்லிகிராம் ஐஸும், 2 கிராம் 220 மில்லிகிராம் ஐஸும் மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.