
அமெரிக்காவின் அவசர கால எண்ணெய் முதற்கட்ட விநியோகங்கள் அடுத்த வாரம்?
அமெரிக்காவின் மூலோபாய எண்ணெய் கையிருப்பிலிருந்து முதற்கட்ட விநியோகங்கள் அடுத்த வாரம் முதல் சந்தைக்கு வரவுள்ளதாக அமெரிக்க வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில், சர்வதேச வலுசக்தி முகாமையின் (IEA) ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் 400 மில்லியன் கொள்கலன் எண்ணெயை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்தியாக தெரிவிக்கின்றன.
இதன் ஒரு பகுதியாக, 172 மில்லியன் கொள்கலன் மசகு எண்ணெயை சந்தைக்கு விடுவிக்குமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்த நான்கு மாத காலப்பகுதியில் இந்த எண்ணெய் கையிருப்பு படிப்படியாக விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
