
ஈரான் போரில் ஒருபோதும் பங்கெடுக்கமாட்டோம் என ஜெர்மன் திட்டவட்டம்!
ஈரான் மீதான போர் நடவடிக்கைகளில் ஜெர்மனி ஒருபோதும் பங்கெடுக்காது என அந்த நாட்டு ஜனாதிபதி பிரீட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
நோர்வே நாட்டிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த போதே அவர் இதனைத் தெரிவித்ததாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹோர்முஸ் நீரிணை ஊடாகச் செல்லும் கப்பல்களுக்கு இராணுவப் பாதுகாப்பை வழங்குவது குறித்து பெர்லின் ஆலோசிக்கவில்லை எனவும், அதற்கான எந்த அவசியமும் தமக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஜெர்மனி இந்தப் போரின் ஒரு பகுதியல்ல, நாங்கள் அதன் ஒரு பங்காளியாக மாறவும் விரும்பவில்லை” என அதிபர் மெர்ஸ் மிகவும் நேரடியாகத் தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கடல் வழிப்பாதைகளில் இராணுவத் தலையீடுகளைத் தவிர்க்க ஜெர்மனி எடுத்துள்ள இந்த முடிவு உலக அரசியலில் முக்கியத்துவமிக்கதாகப் பார்க்கப்படுகிறது.
