120 மில்லியன் ரூபாய் செலவில் 120 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர்
-மஸ்கெலியா நிருபர்-
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடா மஸ்கெலியா கிராமத்தில் உள்ள 120 குடும்பங்களுக்கு, 120 மில்லியன் ரூபாய் செலவில் சுத்தமான குடிநீர் பெற்று கொடுக்கும் முகமாக, நேற்று மதியம் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணன் கலைச்செல்வி, மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி ஆகியோர் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
ஒரு குடியிருப்புக்கு தலா 10 லட்சம் ரூபாய் செலவில் இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த வேலை திட்டம் தேசிய நீர் வழங்கல் திணைக்களம் ஊடாக நேற்று ஆரம்பிக்கப்பட்டு, இதற்கான சுத்தமான குடிநீர் கிளன்டில் தோட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள குடிநீர் தாங்கியில் இருந்து நீரை, நீர் இறைக்கும் இயந்திரம் ஊடாக குடா மஸ்கெலியா கிராமத்தில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் பகிர்ந்து அளிக்க ஏற்பாடு செய்து குடா மஸ்கெலியா கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் நீர் தாங்கி அமைக்கப்பட்டு, அந்த நீர் தாங்கியில் இருந்து நீரை வழங்கும் திட்டம் இடம் பெற்று வருகிறது.
இந்த வேலை திட்டம், 2015 ம் ஆண்டு அப்போதைய நல் ஆட்சி அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான நீர் குழாய்கள் இப் பிரதேசத்திற்கு கொண்டு வந்த போதும், இடை நடுவில் இந்த வேலை திட்டம் கைவிடப்பட்டது.
தற்போதைய அரசாங்கம் இந்த வேலையை பொறுப்பு ஏற்று, 120 மில்லியன் ரூபாய் செலவில் சுத்தமான குடிநீர் வழங்க அடிக்கல் நாட்டப்பட்டு பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

