தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்
தெற்கு லெபனானில் உள்ள லிட்டானி (Litani) ஆற்றைக் கடக்கும் ‘சாராரியே’ (Zrariyeh) பாலத்தின் மீது தாம் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பினர் இந்தப் பாலத்தை ஒரு முக்கிய கடவையாகப் பயன்படுத்தி வருவதாகவும், அண்மைக்காலமாக பாலத்திற்கு அருகில் ஏவுகணை ஏவுதளங்களை நிலைநிறுத்தியுள்ளதாகவும் இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளதாக அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினரின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், லெபனானின் முக்கிய உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.
