பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு யாழில் நேர்ந்த துயரம்!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவல்துறை நோக்கி பயணித்த பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகளின் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளான சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை, இடம்பெற்றுள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதி, வாடகை முச்சக்கர வண்டி ஒன்றில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவல்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர்.

இதன்போது முச்சக்கர வண்டி, மீண்டும் யாழ்ப்பாண பக்கம் நோக்கி திருப்புவதற்கு முயற்சித்த சந்தர்ப்பத்தில், பின்னால் வந்து கார் குறித்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து சம்பவித்தது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி, பிரான்ஸ் தம்பதிகள் இருவர் மற்றும் காரின் சாரதி என நால்வர் படுகாயம் அடைந்தனர். அத்துடன் முச்சக்கர வண்டி மற்றும் கார் என்பன பலத்த சேதங்களுக்கு உள்ளாகின.

படுகாயம் அடைந்த நால்வரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து ஊர்காவல்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.