இந்தியாவிடம் இலங்கை எரிபொருள் கோருவதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவிப்பு!

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் பெற்றோலியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

‘அண்டை நாடுகளுக்கு முதலிடம்’ (Neighbourhood First) என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தக் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய ரீதியிலான எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இந்த உதவி கோரப்பட்டுள்ளது.

இந்த விநியோகம் தொடர்பான மேலதிக இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.