சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்று வியாழக்கிழமை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
உலகளாவிய ரீதியில் அமெரிக்க டொலரின் மதிப்பு வலுவடைந்துள்ளதாலும், முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நகர்வுகளாலும் தங்கம் விலை குறைவடைந்துள்ளது.
அதற்கமைய, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,171.26 டொலராக இன்று விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு அவுண்ஸ் வெள்ளி 85.35 டொலராக டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
