இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!
உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலையில் இன்று புதன்கிழமை எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கம் பவுண் ஒன்று 415,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 383,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,975 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
