
பணிக்கு சமூகமளிக்காத மின்சார சபை ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், புதிதாக நிறுவப்பட்டுள்ள நிறுவனங்களின் அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பணிக்கு சமுகமளிக்காத ஊழியர்களுக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய நிறுவனங்களின் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
