வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியானது இன்றையதினம் செவ்வாய்க்கிழமை கல்லூரியின் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆரம்பத்தில் விருந்தினர்கள் மாலை அணிவித்து, மேற்கத்திய வாத்தியங்கள் இசை முழங்க மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம் என்பதன் இடம்பெற்றன.

பின்னர் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு, தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்ட நிலையில் விளையாட்டுப் போட்டியானது ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து அணிநடை இடம்பெற்றது. பின்னர் தொடர்ச்சியாக பாண்ட் அணிவகுப்பு சுவட்டு நிகழ்ச்சிகள், இடைவேளை நிகழ்ச்சிகள் என்பனவும் இடம்பெற்றிருந்தன.

அதனைத் தொடர்ந்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கல், விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்று, நன்றியுரையுடன் விளையாட்டு போட்டியானது நிறைவுக்க் வந்தது.

கல்லூரியின் முதல்வர் சிவஞானபோதம் தனஞ்சயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சத்தியசீலனும், சிறப்பு விருந்தினராக வலிகாமம் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்ஆ.சஞ்சீவனும், கௌரவ விருந்தினர்களாக சங்கானை கல்வி கோட்ட பணிப்பாளர், ஓய்வு நிலை ஆசிரியர் ப.மதனகோபாலனும் கலந்து சிறப்பித்ததுடன் ஆசிரியர்கள், அயற்பாடசாலை அதிபர்கள் – ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.