இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கான விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கான விசேட அறிவிப்பு ஒன்றை இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மத்திய கிழக்கு போர் நடவடிக்கைகள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே இலங்கைக்கான பயண ஆலோசனை (Travel Advisory) தற்போது நிலை 2 (Level 2 – Exercise Increased Caution) என்ற மட்டத்தில் உள்ளது.
இது கடந்த 2025 ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் மாற்றமின்றித் தொடர்கிறது.
அத்துடன், மாற்றுப் பயண வழிகளை எதிர்பார்க்கும் சுற்றுலாப் பயணிகளுக்காக, இலங்கை அரசாங்கம் 14 நாட்கள் இலவச விசா நீடிப்பை வழங்குகிறது.
அதேநேரம், சமீபத்திய பாதுகாப்பு எச்சரிக்கைகளைப் பெற ‘STEP’ (step.state.gov) இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளுமாறும், மேலதிக தகவல்களுக்கு travel.state.gov இணையதளம் அல்லது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சமூக வலைதளங்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
விமானப் பயணம் தவிர்ந்த ஏனைய விடயங்கள் தொடர்பான உதவிகளுக்கு இலங்கையின் சுற்றுலாத் துறை அவசர அழைப்பு இலக்கமான 1912 ஐத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அததுடன், இந்த அறிவிப்பு ஒரு ‘பயணத் ஆலோசனை’ அல்ல என்பதும், தற்போதைய உலகளாவிய சூழலைக் கருத்திற்கொண்டு விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்பு என்றும் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
