யாழில் ஆறு கிலோவுக்கும் அதிக எடையுடைய தங்கத்தை கடந்த முயன்ற இருவர் கைது!

-யாழ் நிருபர்-

யாழில் இருந்து இந்தியாவுக்கு தங்கத்தை கடத்தி செல்ல முயற்சித்த இருவர் நேற்று திங்கட்கிழமை மாதகல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த இருவரும் 6 கிலோ 685 கிராம் எடையுடைய தங்க கட்டிகளை கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு எடுத்து செல்ல முயற்சித்தனர்.

இது குறித்து கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் காங்கேசன்துறை – சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.