உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, அதிகரிப்பை திவு செய்து இன்று செவ்வாய்க்கிழமை 5,159 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, வெள்ளியின் விலையும் அதிகரிப்பை பதிவு செய்து 88.15 அமெரிக்க டொலர்களாக விற்பனையாகின்றது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.