இலங்கையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யதள்ளது.
ஆக்டேன் 92 பெற்றோல் ஒரு லீட்டரின் விலை ரூ.24 அதிகரித்து ரூ.317 ஆகவும், ஆக்டேன் 95 பெற்றோல் ரூ.25 அதிகரித்து ரூ.365 ஆகவும் உள்ளது.
ஆட்டோ டீசலின் விலை ரூ.22 அதிகரித்து ரூ.303 ஆகவும், சூப்பர் டீசல் ரூ.24 அதிகரித்து ரூ.353 ஆகவும் உள்ளது.
இதற்கிடையில், மண்ணெண்ணெய் லீட்டருக்கு ரூ.13 அதிகரித்து ரூ.195 ஆக உள்ளது.

