நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே மோதல் : ஒருவர் வெட்டிப் படுகொலை!

-யாழ் நிருபர்-

நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு வாள் வெட்டில் முடிந்ததில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம், திங்கட்கிழமை இன்று மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது.

கண்டியை சேர்ந்த எம்.கிருஷ்ணகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நயினாதிவில் உள்ள ஆலயங்களில், கண்டி மற்றும் நுவரெலியா பகுதியை சேர்ந்த இரண்டு பூசகர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டில், நுவரெலியாவை சேர்ந்த பூசகரின் கத்தி குத்துக்கு இலக்காகி, கண்டியை சேர்ந்த பூசகர் பலியாகியுள்ளார்.

சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.