ஹிக்கடுவையில் எண்ணெய் கலந்த கடற் பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் பணிகளில் இலங்கை கடலோரக் காவல்படையினர் விரைந்து ஈடுபட்டுள்ளனர்.
கடல்சார் சூழலியல் அமைப்புக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், இலங்கை கடற்படை, சமுத்திரச் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் உதவியுடன் கடலோரக் காவல்படையினர் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.
நரிகம, தொடகமுவ மற்றும் ஹிக்கடுவ ஆகிய இடங்களில் உள்ள எண்ணெய் படிந்த கடற்கரைப் பகுதிகளைச் சுத்தம் செய்யும் பணிகளை முன்னெடுத்துள்ளதாக இலங்கை கடலோரக் காவல்படை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

