ஒரு வாரத்திற்கு முடங்கும் ஓமான் எயார்!

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலை தொடர்ந்து, நாளை திங்கட்கிழமை முதல் எதிர்வரும் மார்ச் 15 வரை வளைகுடா நாடுகளுக்கான தனது அனைத்து வானூர்தி சேவைகளையும் இரத்து செய்வதாக ஓமான் எயார் (Oman Air) அறிவித்துள்ளது.

இதன்படி குறித்த ஒரு வார காலப்பகுதியில் டுபாய், பஹ்ரைன், தோஹா, தம்மாம், குவைத், பக்தாத், காசாப் (Khasab) ஆகிய நகரங்களுக்கான வானூர்தி சேவைகள் பாதிக்கப்படும் என அந்த வானூர்தி சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், கோபன்ஹேகன் (Copenhagen) நகருக்கான வானூர்தி சேவைகளும் இந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக ஓமான் எயார் குறிப்பிட்டுள்ளது.

வான்பரப்பு கட்டுப்பாடுகள் காரணமாகப் பயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.