திருகோணமலை-ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற கார் விபத்து

-மூதூர் நிருபர்-

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் கார் சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தரப்பியுள்ளார்.

திருகோணமலையிலிருந்து வாழைச்சேனை நோக்கி பயணித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது வீதி மின்கம்பமும் சேதமாகியுள்ளது.

கார் சாரதி சிறு காயம் மாத்திரமே ஏற்பட்டுள்ளதுடன், அவர் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.