நீங்கள் வருந்த வேண்டாம் எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் -தொண்டர்கள் மத்தியில் மனம் திறந்த த.வெ.க தலைவர் விஜய்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் விஜய், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகள் தொடர்பாக முதல்முறையாகத் தொண்டர்கள் மத்தியில் மனம் திறந்து பேசியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

சமீபகாலமாகத் தன்னைச் சுற்றி நிலவும் சில தனிப்பட்ட பிரச்சினைகளால் தொண்டர்கள் மனவேதனை அடைவதைக் கண்டு தானும் வருந்துவதாகத் தெரிவித்த அவர், அத்தகைய விவகாரங்களை விட்டுவிட்டு மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார்.

பெண்கள் முன்னேற்றத்திற்கான பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை இந்த விழாவில் அறிவித்த விஜய், தனது உரையின் இறுதியில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

“நீங்கள் Hurt ஆவதை நான் பார்க்கிறேன், அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்களும், நானும் மக்களின் பிரச்சினைகளை மட்டும் பார்ப்போம்” அது அவ்வளவு Worth இல்லை என அவர் குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்பு, அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுப்பப்பட்ட ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்ததோடு, தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன