இலங்கையில் இன்று இரண்டு முறை தங்கவிலை அதிகரிப்பு!

இலங்கையில் இன்று சனிக்கிழமை இரண்டு முறை தங்கவிலை அதிகரித்துள்ளது.

இன்று காலை 410,000 ரூபாயாக இருந்த தங்கவிலை மாலையில் 2,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 412,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 381,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,625 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.