எரிபொருள் மற்றும் மின்சார பாவனையை குறைப்பதற்காக வேலை நாட்களை குறைத்துள்ள பிலிப்பைன்ஸ் அரசு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக, அதிகரித்து வரும் உலகளாவிய எரிபொருள் விலைகளுக்கு மத்தியில், எரிசக்தி நுகர்வைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பிலிப்பைன்ஸ் அரசு அலுவலகங்கங்களின் வேலை நாட்களை நான்காக குறைத்துள்ளது.

இந்த அறிவிப்பு, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் தெரிவித்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய எண்ணெய் விலைகள் நிலையற்றதாக இருப்பதால், மின்சார பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் பணியிடங்களுக்கு செல்லும் பயணத்திற்கான எரிபொருள் நுகர்வைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது இந்த நடவடிக்கை, என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய அரச நிறுவனங்கள் வழமை போன்று செயற்படும் என்றும், அவற்றுக்கு இந்த வேலைநாள் குறைப்பு இல்லை என்றும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.