இலங்கையில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக, இலங்கையில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம், நேற்று வெள்ளிக்கிழமை, கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நிலவும் போர் நிலைமை சீரடைந்து, சுற்றுலா பயணிகள் தமது நாடுகளுக்கு திரும்பும் வரை, தினமும் காலை 11:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை உணவு வழங்கப்படும், என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த முயற்சியை, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் மற்றும் இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் ஆகியவை  இணைந்து ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது