அம்பாறையில் ஹெரோயினுடன் இருவர் கைது

-அம்பாறை நிருபர்-

அம்பாறை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில், சந்தேகத்திற்கிடமாக நடமாடியவரை சோதனை செய்த போது, அவரிடம் இருந்து 95 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய நிலைய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

அம்பாறை நகரத்தின் திஸ்ஸபுரவில் நடமாடிய குறித்த சந்தேக நபரை கைது செய்ய, பொலிஸார் தங்கள் முகவரைப் பயன்படுத்தி, 72 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை 2000 ரூபாவுக்கு சந்தேக நபரிடம் இருந்து கொள்வனவு செய்துள்ளனர்.

இதன் போது, ஹெரோயினை விற்பனை செய்து வந்த திஸ்ஸபுரத்தைச் சேர்ந்த சந்தேக நபர், கைது செய்யப்பட்டதுடன், அவரை சோதனை செய்த போது, 70 மில்லி கிராம், 80 மில்லி கிராம், 90 மில்லி கிராம் எடையுள்ள மூன்று சிறிய ஹெரோயின் பொதிகள் உட்பட 6000 ரூபா பணமும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதேவேளை ஹெரோயின் போதைப்பொருளை வாங்கிய சந்தேகநபர் ஒருவரும், விற்ற சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்த சோதனையை, அம்பாறை பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் மேற்பார்வையில், அம்பாறை பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமாராச்சி மற்றும் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல் இந்திரஜித் குணவர்தன ஆகியோர் மேற்பார்வையில், அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய நிலைய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டனர்.