
இன மத பேதமின்றி நாடு முழுவதும் லசித் மாலிங்க விடுத்துள்ள அழைப்பு!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மாலிங்க, நாட்டின் எதிர்கால வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்டறியும் நோக்கில் ஒரு பாரிய திட்டத்தை அறிவித்துள்ளார்.
இதன்படி சமூக வலைதளங்களில் கிரிக்கெட் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் திறமையுள்ள இளைஞர்களை இலக்கு வைத்து, 17 முதல் 22 வயதுக்குட்பட்ட 300 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முதற்கட்டமாக வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
இன, மத பேதமின்றி சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் என அனைவருக்கும் இது ஒரு திறந்த வாய்ப்பாகும்.
இலங்கை முழுவதும் உள்ள திறமைகளை வெளிப்படைத்தன்மையுடன் கண்டறிவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
கடின பந்து (Leather ball) போட்டிகளில் விளையாடிய அனுபவம் ஒரு தடையாக இருக்காது எனவும், திறமை இருப்பின் எவரும் இதில் பங்கேற்கலாம் எனவும் மலிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக வருபவர்கள் தமது பிறப்புச் சான்றிதழ், ஓட்டப் பயிற்சிக்கான காலணிகள் மற்றும் பந்துவீச்சுக்கான காலணிகளுடன் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகுதியுள்ள ஆனால் காலணிகள் இல்லாத வீரர்களுக்கு, அந்த இடத்திலேயே பயன்படுத்துவதற்குத் தேவையான காலணிகள் வழங்கப்படும் எனவும் அவர் தனது பதிவில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

