ஈரான் மீதான தாக்குதல் தீவிரம் – இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவிப்பு

ஈரானின் இராணுவ பலத்தை தகர்க்கும் நோக்கில் “அடுத்த கட்டத்திற்கு” தாங்கள் நகர்வதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) அறிவித்துள்ளது.

ஈரானிய ஆட்சியையும் அதன் இராணுவக் கட்டமைப்பையும் முழுமையாகச் சிதைப்பதே இதன் நோக்கம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஈயல் ஜமீர் நேற்று வியாழக்கிழமை மாலை உரையாற்றிய போது,

வான்வழி ஆதிக்கத்தை நிலைநாட்டிய பிறகு, இப்போது போரின் அடுத்த கட்டத்திற்குச் செல்கிறோம். இதில் ஈரானிய ஆட்சியின் அடித்தளங்கள் மற்றும் இராணுவத் திறன்கள் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும், என்று கூறினார்.

இதேவேளை, ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை அமைப்புகளைக் குறிவைத்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில், ஈரானுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.