
யாழில் கடந்த சில நாட்களில் போதைப் பொருட்களுடன் 10 பேர் கைது
-யாழ் நிருபர்-
கடந்த சில நாட்களாக, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சந்தேகநபர்கள் பலர், பல்வேறு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் கசிப்பு, கஞ்சா மற்றும் ஹெரோயின் போன்ற போதை பொருட்களுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவேளை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
