
போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கை
-மூதூர் நிருபர்-
தேசிய போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு தோப்பூர் காவலரண் பொலிஸ் பிரிவிலுள்ள ஜின்னாநகர் பகுதியில் இன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்றது.
இதன்போது முச்சக்கர வண்டி உள்ளிட்ட வாகனங்களுக்கு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
மேலும் வர்த்தக நிலையங்களுக்கு போதை ஒழிப்புத் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
தோப்பூர் காவலரண் பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.எப்.றமீஸ் தலைமையில் இவ் விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.
இதில் பிரஜா சக்தி தவிசாளர், பொலிஸ் குழுவினர்,சிவில் செயற்பாட்டாளர்களும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
