
இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாக வீழ்ச்சி!
இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக சிறுவர் நோய் நிபுணர்கள் சங்கம் தெரிவிக்கிறது.
லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுனில் விஜேசிங்க இது குறித்துக் கூறுகையில்,
மூன்றரை இலட்சமாகக் காணப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை தற்போது இரண்டரை இலட்சமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
