இசை நிகழ்ச்சி பார்க்க சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!

கொழும்பு துறைமுக நகர கடலில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் ஒன்று மிதப்பதாக கிடைத்த தகவலுக்கமைய கொழும்பு துறைமுக பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யாழ் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 24 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

துறைமுக நகரில் கடந்த 28 ஆம் திகதி நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் அந்த நபர் கலந்து கொண்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்