யாழ் மருதனார்மடம் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்!

யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள் தானாகவே தீப்பற்றி எரிந்ததா, அல்லது யாராவது தீ மூட்டினரா என இதுவரை தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

இந்த சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.