ஈரான் மீதான தாக்குதலின் போது மூன்று அமெரிக்கப் படைவீரர்கள் உயிரிழப்பு

ஈரானை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மூன்று அமெரிக்கப் படைவீரர்கள் உயிரிழந்துள்ளதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அமெரிக்கத் தரப்பில் பதிவான முதலாவது உயிரிழப்புகள் இவை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கையின் போது மேலும் ஐந்து படைவீரர்கள் பலத்த காயமடைந்துள்ளதாக அந்நாட்டு இராணுவ அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

உயிரிழந்த வீரர்களின் விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.

ஈரானுக்கு எதிரான இந்த இராணுவ நடவடிக்கையை அறிவித்திருந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தார். “அமெரிக்க வீரர்களின் உயிர்கள் பறிபோகலாம், போரின் போது இத்தகைய உயிரிழப்புகள் சாதாரணமானவை” என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், அமெரிக்கா ஈரானுக்கு எதிரான தனது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.