
எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு பிரதானமாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி நாளை அதிகாலை வேளையில் நாட்டின் பல பகுதிகளில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவ்வாறான பகுதிகளில் அதிகாலை வேளையில் வீதிப் போக்குவரத்துகளில் ஈடுபடும் போது, பார்வைத்திறன் குறைவாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
